Friday, 13 December 2013

ந‌ம‌க்கு பிடித்த‌வற்றை
ப‌ரிமாறி ம‌கிழும்போது
அது அவ‌ளுக்கும் பிடிக்கும்
என்ப‌தை ம‌றக்கிறாள்...

அவ‌ளுக்கென‌ வைக்காம‌ல்
தீர்ந்துவிடும் போது
அவ‌ளுக்கு வ‌யிறு இருப்ப‌தையே
ம‌றந்துவிடுகிறாள்...

க‌ட‌வுள் அம்மா வ‌டிவில் வ‌ந்தானா?
இல்லை த‌ன‌க்கு ப‌திலாக
அனுப்பி வைத்தானா?
அதெல்லாம் என‌க்கு தெரியாது
என்னை பொறுத்த‌ம‌ட்டில்
அம்மா க‌ட‌வுளுக்கு
நிக‌ரான‌வ‌ள் அல்ல‌,
க‌ட‌வுளுக்கும் மேலான‌வ‌ள்...

தங்க‌த்திலும் தூசு இருக்க‌லாம்
ஆனால்
தாயின் பாச‌த்தில் என்றும்
மாசு இருப்ப‌தில்லை.......

No comments:

Post a Comment