உங்கள் பாத்திரத்தில் உணவிருந்தால்..
உடுத்த உடையிருந்தால்..
தலை மேல் கூரையிருந்தால்..
உறக்கம் கொள்ள இடமிருந்தால்..
உலகின் 75 சதவிகித மக்களைவிட நீங்கள் மேலானவரே!
உங்கள் வங்கிக் கணக்கில் பணம் இருந்தால்..
உங்கள் பர்ஸில் சிறிது சில்லறை இருந்தால்..
உலகின் முதல் 8 சதவிகித பணக்காரர்களில் நீங்களும் ஒருவரே!
நீங்கள் போரின் அனுபவம் பெறாதிருந்தால்..
எந்தவித சித்திரவதைக்கும் உள்ளாகாதிருந்தால்..
தினம் தினம் செத்துப் பிழைக்கும், கோடானு கோடி மக்களைவிட நீங்கள் அதிர்ஷ்டசாலிகளே!
மேற்கூறியவைகளைத் தங்களால் படித்துப் பார்க்க முடிந்தால்..
பார்வையற்றுக் கிடக்கும் 3 கோடி சக மனிதர்களைவிடவும் நீங்கள் அதிகம் கொடுத்து வைத்தவர்களே!!!
சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரைப்போல வருமா?