நேற்றிரவு நடந்தது:
(என் பாட்டியின்
தங்கை போன் பன்னுனாங்க, கட் பண்ணிட்டு நான் பண்ணேன். அதுக்கு
முன்னாடி மற்ற பேரப்பிள்ளைகளுக்கும் போன் பன்னிருக்காங்க,,)
நான்: ஹலோ.... அம்மா....
பாட்டி: தங்கம்......
நான்: சொல்லும்மா, காலைல போன் பண்ணப்போ ஏன் எடுக்கல?
பாட்டி: வெளிய இருந்திருப்பேன்டா . அதான்டா..
நான்: சரிம்மா,,, நீ நல்லாருக்க ல?
பாட்டி: நல்லாருக்கேன்டா........
நான்: சரிம்மா,,, நீ உடம்ப பாத்துக்கோ, நேரத்துக்கு சாப்புடு..
இரும்மா அம்மாட்ட கொடுக்கறேன்......
பாட்டி: தங்கம்......
நான்: சொல்லும்மா....
பாட்டி: சந்தோசமா இருக்குப்பா
நான்: எதுக்குமா?
பாட்டி: உனக்கு முன்னாடி வள்ளி, ராஜேஸ், சசி, தமிழ், ராஜி எல்லார்கிட்டயும் பேசுனேன்டா,
ஆனா, யாருமே நீ நல்லாருக்கியா? சாப்டியா? னு கேக்கலடா..
நீ கேட்ட ல! சந்தோசமா இருக்குப்பா,,,,..
( எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல..,)....
நான்: அம்மா...
பாட்டி: சொல்ல தோனுச்சுடா... சரிப்பா, அம்மாட்ட குடு...
நான்: ம்ம்ம் …
# நாம் கண்டுகொள்ளாமல் விட்ட உறவுகளும் அதனுள் புதைந்த உணர்வுகளும் காத்துகொண்டிருக்கிறது நம் அன்பிற்க்காக......